உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிய கடை வியாபாரிகள்

ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிய கடை வியாபாரிகள்

ஈரோடு: ஈரோடு, பெரிய வலசு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை தாமாகவே முன் வந்து, கடை வியாபாரிகள் சிலர் அகற்றினர்.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில், மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், முனிசிபல் காலனி ரோடு, பெரிய வலசு ஆகிய பகுதிகளில், சாலையோரத்தில் இருசக்கர வாகன கன்சல்டிங் அலுவலகங்கள், மளிகை கடைகள், டீ கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். நேற்று முன்தினம் ஒலி பெருக்கி வாயிலாக, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து முனிசிபல் காலனி, பெரிய வலசு உள்ளிட்ட பகுதிகளில், கடை வியாபாரிகள் சிலர் தாங்களாகவே முன் வந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முனிசிபல் காலனி, பெரிய வலசு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, வியாபாரிகள் சிலர் தாமாகவே முன் வந்து அகற்றி வருகின்றனர். மீதமிருக்கும் கடைகள் நாளை (17ம் தேதி) போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை