ஈரோடு: தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்க, ஈரோடு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையிலான விஏஓக்கள், ஈரோட்டில் டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: கோபி தாலுகா புஞ்சை துறையம்பா-ளையம் 'அ' கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக நடராஜ் பணி செய்கிறார். அக்கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக இயங்கிய ஸ்டார் குவாரி மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மார்ச், 16ல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மீண்டும், ஜூன், 10ல் புகார் செய்துள்ளார். கடந்த ஜூலை, 2ல் பங்களாபுதுார் போலீசார், விபத்து நடப்பதற்கு இரு மாதத்துக்கு முன் வழக்கு பதிவு செய்-துள்ளனர். தாசில்தாருக்கு எப்.ஐ.ஆர்., நகல் வழங்கி, நடவடிக்-கைக்கு பரிந்துரைத்துள்ளனர்.எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த, 20ல் நடந்த வெடி விபத்தில், 2 பேர் பலியாகினர். இதுபற்றியும் வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிகழ்வில், வி.ஏ.ஒ., தனது பணியில் சுணக்கம் காட்டாத நிலையில், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது மாவட்ட நிர்வாகம் மீது அவநம்பிக்கையை ஏற்ப-டுத்துகிறது. அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மாவட்ட செயலாளர் முருகேசன் கூறியதாவது: வி.ஏ.ஓ., நடராஜ் மீது தற்காலிக பணி நீக்க நடவடிக்கை அறிக்கை தயார் செய்துள்ளனர். அதை அவர் இன்னும் வாங்கவில்லை. அவர் மீது நடவடிக்கை பாயும் பட்சத்தில், கோபி ஆர்.டி.ஓ., அலு-வலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் பேசி, தொடர் உண்ணாவிரத போராட்-டத்திலும் ஈடுபடுவோம். இவ்வாறு கூறினார்.