மந்தமாக நடக்கும் வால்வு சீர-மைப்பு திருநகர் காலனி சாலையில் இடை-யூறு
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பார்க் கேட் எதிரே செல்லும் திருநகர் காலனி சாலை வழியாக, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதேபோல் நேதாஜி தினசரி காய்கறி சந்தைகளுக்கு வரும் லோடு வண்டிகள், பவானி, அந்தியூர் செல்லும் வாகன ஓட்டி-களும் இந்த ரோட்டையே பிரதான-மாக பயன்படுத்தி வருகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு அருகில் உள்ள கார்-னரில், அப்பகுதிக்கான குடிநீர் குழாய் வினியோகம் செய்யும் வால்வும் உள்ளது. இந்த வால்வில் பழுது ஏற்பட்-டதால் தற்போது சீரமைப்பு பணி நடக்கிறது. வழக்கம்போல் பாது-காப்புக்காக ஒருபுறம் பேரிகார்டு, மற்றொரு புறம் கற்கள் வைத்துள்-ளனர். ஆனால், மந்த நிலையில் நடக்கும் பணியால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பணியை விரைந்து முடித்து பேரிகார்டுகளை அகற்றி, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.