உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை

21 மணி நேரம் தொடர் போராட்டத்தால் குப்பை கிடங்கில் அணைக்கப்பட்ட புகை

ஈரோடு, வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீயை அணைக்க 7 மணிநேரம் போராடிய நிலையில், புகையை முழுவதும் கட்டுப்படுத்த, 21 மணிநேரம் ஆனது. ஈரோடு அருகே வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில், நேற்று முன்தினம் காலை, 11:௦௦ மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள், ௨௫ தீயணைப்பு நிலைய வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏழு மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும், புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. புகை தீயாக மாறும் அபாயம் இருந்ததால், கட்டுப்படுத்தும் பணியை தீயணைப்பு வீரர்கள் துவங்கினர்.அவர்களுக்கு உதவியாக கிடங்கு ஊழியர், துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மணி, நேற்று மதியம், ௩:௦௦ மணிக்கு நிறைவடைந்தது. புகை முழுவதும் கட்டுக்குள் வந்ததை தொடந்து, கிடங்கில் இருந்த குப்பையை ஈரமாக்கும் பணியும் நடந்து முடிந்தது. இதன்படி, 28 மணி நேரம் தொடர் போராட்டத்தால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக, மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை