உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிசியோதெரபி கிளீனிக் அமைக்க மானிய கடன்

பிசியோதெரபி கிளீனிக் அமைக்க மானிய கடன்

ஈரோடு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, உடற்பயிற்சி சிகிச்சை மையம் (பிசியோதெரபி கிளீனிக்) அமைக்க, மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. சொந்த கட்டடம் அல்லது வாடகை கட்டடம் தேர்வு செய்யலாம். தொழில் முனைவோர் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி, தொழில் துவங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து இலவச ஆலோசனை வழங்கப்படும். பிசியோதெரபி பயிற்சி பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த, 18 முதல், 40 வயதுக்கு உட்பட்டோர் www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.இத்தொழிலுக்கு, 6 லட்சம் ரூபாய் நிர்ணயித்து, மானியமாக 35 சதவீதம் அல்லது 2.10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். பயனாளிகள், 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி, எஞ்சிய தொகையை கடனாக பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆறாம் தளத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் நேரிலும், 0424 2259453 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை