மீண்டும் சந்தையை இயக்க தாராபுரம் நகராட்சி முடிவு
தாராபுரம், தாராபுரம் நகர்மன்ற கூட்டம் தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் நேற்று நடந்தது. ஆணையர் முஸ்தபா முன்னிலை வகித்தார்.திட்டம் மற்றும் பொது நிதியில் இருந்து, தார்ச்சாலை, சிமெண்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் செய்தல் உள்ளிட்ட, 76 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில், 20 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாராபுரம் சந்தையை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் என்ற தீர்மானமும் அடங்கும்.