கவுன்சிலர்கள் ஒட்டு மொத்த எதிர்ப்பு மாநகராட்சியில் சொத்து வரி தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி, காலியிட வரி, பெயர் மாற்றக்கட்டணம் வசூலிப்-பதற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். துணை மேயர் செல்வராஜ், ஆணையர் மனிஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை வணிக வளாகத்தில் கடையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்த-போது தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு யார் அனுமதி அளித்தது? இதேபோல் பல்வேறு கடைகளின் சுவர் உடைக்கப்பட்டு கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?மாநகராட்சியில் பல்வேறு சாலைகளில் வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால், எச்சரிக்-கையூட்டும் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் விபத்து ஏற்படுகிறது. தெரு விளக்குகள் பெரும்-பாலான இடங்களில் போடப்படாமல் உள்ளது. பாதாள சாக்கடையுடன் மழைநீர் இணைப்பு ஒரு-சில இடங்களில் மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை இணைப்புடன் உள்ள மழை நீர் இணைப்புள்ள அனைத்து குடியிருப்புக-ளிலும் உடனடியாக துண்டிக்க வேண்டும். பாதாள சாக்கடை மூடிகளை சீரமைக்க வேண்டும்.கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் பணிகள் தொய்வு அடையும்போது அருகில் உள்ள வீடுக-ளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. எனவே அங்கு 25 எச்.பி. மின் மோட்டாருக்கு பதிலாக 40 எச்.பி. மோட்டாரை பொருத்த வேண்டும். இவ்-வாறு பேசினர்.பதில் அளித்து அதிகாரிகள் பேசியதாவது: பாதாள சாக்கடையில் மழைநீர் கலக்காமல் இருக்க வீடுகள் தோறும் நோட்டீசு கொடுக்கப்பட்-டுள்ளது. விரைவில் பாதாள சாக்கடையுடன் மழைநீர் இணைப்பு கொடுத்திருந்தால் அகற்றப்-படும். வணிக வளாக கடை சுவரை இடித்து தொழிலாளி பலியான விவகாரத்தில், கடையை ஏலம் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்-வாறு பேசினர்.கடந்த முறை சொத்து, காலியிட பெயர் மாற்-றத்துக்கு, 0.2 சதவீத வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் ஒத்தி வைக்-கப்பட்டது. இந்த முறை, 0.1 சதவீதமாக குறைத்து மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி தி.மு.க., கவுன்சி-லர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர்.இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், 'சொத்து, காலியிட பெயர் மாற்றத்துக்கு வரி விதிப்பது தொடர்பாக நிதிக்குழு கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட வேண்டும். எனவே தீர்மா-னத்தை ஒத்தி வைக்க வேண்டும்' என்றனர். இதனால் சொத்து வரி தீர்மானம் இரண்டா-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.25 தீர்மானம் நிறைவேற்றம்மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் டெங்கு தடுப்பு பணி காலை, மாலை நேரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து, நவ., மாதம், 30ம் தேதி வரை பணியாற்ற ஆகும் செலவீ-னத்தை அனுமதிக்க வேண்டும். மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையம் அமைக்கவும், கருங்கல்-பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கங்காபுரம் நுாலகம் மற்றும் பால் கூட்டுறவு கட்-டடம் அமைக்க தடையில்லா சான்று வழங்கு-வது என்பது உள்பட, 26 தீர்மானங்களில், 25 தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம், கோணவாய்க்கால், கொல்லம்பாளையம், கே.கே.நகர் என நான்கு இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்க, நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு நேற்று நடந்த கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை எழுந்தது. இந்த இடங்-களில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால், மக்கள் அவதிப்படும் நிலை குறித்து, மண்டல தலைவர் பழனிசாமி விளக்கமாக பேசினார். இதற்கு பதில் அளித்த கமிஷனர் மனிஷ், ''அடுத்த கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்-தலாம்,'' என்றார்.