உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நாளை நடக்கிறது

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வு நாளை நடக்கிறது

சென்னிமலை:சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில், மதுரை மாநகரில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வும் ஒன்று. இந்நிகழ்வு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 45 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நடப்பாண்டு நாளை காலை, 11:00 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்குகிறது.மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை போல் அமைக்கப்பட்டு மதியம், 3:20 மணிக்கு கைலாசநாதர் அம்பாளுடனும், தேவியருடன் சுப்பிரமணிய சுவாமியும் தேரில் எழுந்தருள்வர். அங்கு தலைமை அர்ச்சகர் ராமாநாதசிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் நடத்த, ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடி வழிபாடு நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை பிட்டு திருவிழா குழு தலைவர் ஜெயலட்சுமி பரமானந்தன் தலைமையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ