உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்

காந்திஜி சாலையில் வாகனத்தில் பழக்கடை விபத்து அபாயத்தை கண்டுக்காத போலீசார்

ஈரோடு: ஈரோடு மாநகரில் சமீப காலமாக, வாகனங்களில் வைத்து பழ விற்பனை நடப்பது அதிகரித்துள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: காந்திஜி சாலையில் தினமும் காலை முதல் இரவு வரை, 10க்கும் மேற்பட்ட பழக்கடைகள் சிறிய ரக சரக்கு ஆட்டோவில் சாலையோரம் நடக்கிறது. சென்னிமலை சாலை, சத்தி சாலை, ஈரோடு தெற்கு எல்.ஐ.சி, அலுவலக பகுதிகளிலும் வாகன பழக்கடைகளை காணலாம்.தற்போது மாநகரில் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளால் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் குறுகலாகியுள்ளது. ஆனாலும், குறுகலான காந்திஜி சாலையில்தான் சாலையோர பழக்கடை வியாபாரம் நடக்கிறது. வாகனத்தில் செல்வோர் திடீர், திடீரென நிறுத்துவதால், வாகன விபத்துக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. காந்திஜி சாலை பாலத்தின் ஓரம் மட்டும், 5 பழக்கடை வாகனங்களில் தினமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் வாகன விபத்து அபாயம் இருப்பதை அறிந்தும், போக்குவரத்து போலீசார் மற்றும் சூரம்பட்டி போலீசார் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ