உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச விழா

சென்னிமலை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது தைப்பூச விழா

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், ௧௫ நாட்கள் நடக்கும் தைப்பூச விழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.செங்குந்த முதலியார் சமூக பெரியவர்கள், மலை மீது முருகன் சன்னதி முன்புற கொடி மரத்தில், சேவற்கொடியேற்றி விழாவை நேற்று தொடங்கி வைத்தனர். இதற்காக முன்னதாக சென்னிமலை கைலாச நாதர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு, தீர்த்த குடங்களுடன் காலை, 7:00 மணிக்கு புறப்பட்டது. படிக்கட்டு வழியாக கோவிலை ஊர்வலம் அடைந்தது.மூலவர் சிலைக்கு சிறப்பு தீர்த்த அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரியார், கொடி மரத்துக்கு பூஜை செய்து, சுவாமி மற்றும் கொடிமரத்துக்கு காப்பு கட்டினார்.இதை தொடர்ந்து மதியம், 12:50 மணிக்கு சேவல் கொடியை தாங்கி, மேளதாளம் முழங்க திருக்கோவிலை வலம் வந்து, கொடிமரத்தில் சேவல் கொடியையும், மார்கண்டேஸ்வரர் ஆலயம் முன் நந்தி கொடியும் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டம், 26ம் தேதி காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. விழா முக்கிய விழாவான மகா தரிசனம், 30ம் தேதி இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை