உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி விழா தற்போது நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக சொர்க்கவாசல் திறப்பு, 30ம் தேதி அதிகாலை நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இவர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை பேக்கிங் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இதற்காக, 750 கிலோ அஸ்கா, முந்திரி, திராட்சை தலா, 15 கிலோ, 15 கிலோ நெய், 300 கிலோ எண்ணெய், 400 கிலோ கடலை மாவு பயன்படுத்தப்பட்டது. வைகுண்ட ஏகாதசிக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக, கோவில் நிர்வாகம் சார்பில் சவுக்கு கட்டை கொண்டு தடுப்பு அமைக்கும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ