மேலும் செய்திகள்
மாணவர்கள் மாயம் விடுதி மேலாளர் புகார்
15-Nov-2024
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கருத்த-ரங்கம், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் நடந்தது.மாநில உதவி தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். டீம் அகா-டமி செயலாளர் ஹாத்திம்தாய் வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் மாநில ஆணையர் பீட்டர் அல்போன்ஸ், 'திப்பு சுல்தான் ஆற்றிய பணிகள்' குறித்து பேசினார். திப்புசுல்தானுக்கு, சத்தியமங்க-லத்தில் மணி மண்டபம் தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாடி வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்-டது.சிறுபான்மை நலக்குழு நிர்வாகிகள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்-டனர். சிறுபான்மை மக்கள் நலக்குழு ராம்தாஸ் நன்றி கூறினார்.
15-Nov-2024