உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

பணம் பறிப்பு வழக்கில் மேலும் இருவர் கைது

காங்கேயம்: காங்கேயம், என்.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சந்த்ரு, 32; திருப்பூரில் பனியன், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த, 15ம் தேதி இரு கார்களில் வந்த ஐந்து பேர், வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, அவரது வருமானம் குறித்து கேள்வி எழுப்பினர்.சந்தேகமடைந்த சந்த்ரு, உள்ளூர் போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். அவரை தடுத்த கும்பல் பணத்தை தராவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். அதேசமயம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வந்ததால், காரில் ஏறி தப்பி சென்றனர். இது தொடர்பாக நான்கு பேரை, ஊதியூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருப்பூர், வெள்ளியங்காடு முருகன், 37; திருப்பூர், தட்டான் தோட்டம் குமார், 29, ஆகியோரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆ-ஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை