உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 30,000 எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் பதிவேற்றும் பணி

கோபியில் 30,000 எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் பதிவேற்றும் பணி

கோபி, கோபி சட்டசபை தொகுதியில், பூர்த்தி செய்து பெறப்பட்ட, 30 ஆயிரம் எஸ்.ஐ.ஆர்., படிவங்களில் உள்ள விபரங்களை, பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.கோபி சட்டசபை தொகுதியில் உள்ள, 296 ஓட்டுச்சாவடிகளில், 2.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பங்களில், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, அதனை தேர்தல் கமிஷன் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. அதன்படி கோபி சட்டசபை தொகுதியில், நேற்று வரை மொத்தம், 30 ஆயிரம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் திரும்ப பெற்று, அதன் விபரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இதுவரை குறிப்பிட்ட செயலியில், 10 சதவீத படிவங்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்துள்ளதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ