நகராட்சி வரி வசூலிப்பில் வெள்ளகோவில் முதலிடம்
நகராட்சி வரி வசூலிப்பில் வெள்ளகோவில் முதலிடம்காங்கேயம், அக். 18-வெள்ளகோவில் நகராட்சியில், 21 வார்டுகளில், 55 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நகராட்சி பகுதியில் தறி தொழில், ஸ்பின்னிங் மில், எண்ணெய் மில் என முக்கிய தொழில் நடக்கிறது. இந்நிலையில், 2023-24ம் நிதியாண்டில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, காலியிட வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி, 6.௦௫ கோடி ரூபாய் வசூலித்து, தமிழகத்தில் நகராட்சி அளவில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில், 34 நகராட்சிகளில் தற்போது வெள்ளகோவில் நகராட்சியில், சொத்து வரியினங்களில், 15 சதவீத வளர்ச்சி விகிதம் அடைந்துள்ளது. 65 சதவீத வசூலிக்கப்பட்டு தமிழகத்திலேயே முதல் நகராட்சியாக உள்ளது. வரி வசூல் பணி மேற்கொண்ட வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு, சால்வை அணிவித்தும், புத்தாடை வழங்கியும் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன்பாராட்டினார்.