வேளாளர் மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ஈரோடு,:ஈரோடு அருகே திண்டலில் உள்ள வேளாளர் மகளிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் வின்சென்ட் பங்கேற்றார். விழாவில், 1,565 இளங்கலை மாணவியர், 429 முதுகலை மாணவியர் என, 1,994 பேருக்கு பட்டம் வழங்கி பேசினார். இன்றைய நவீன யுகத்தில் அறிவியலின் முக்கியத்துவம், பெண் கல்வியின் அவசியம், உயர் கல்வியின் இன்றியமையாமை, ஆராய்ச்சிக்கான நலத்திட்டம், மாணவிகள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கான வழிமுறை குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயக்குமார், இணை செயலாளர்கள் நல்லசாமி, ராசமாணிக்கம், நிர்வாகக்குழு உறுப்பினர் குலசேகரன், கல்லுாரி முதல்வர் பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.