உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூரம்பட்டி 4 ரோட்டில் சிக்னல் மீண்டும் இயங்குமா? தாறுமாறாக பறக்கும் வாகனங்களால் விபத்து அச்சம்

சூரம்பட்டி 4 ரோட்டில் சிக்னல் மீண்டும் இயங்குமா? தாறுமாறாக பறக்கும் வாகனங்களால் விபத்து அச்சம்

ஈரோடு: ஈரோடு மாநகரில் சூரம்பட்டி நால்ரோட்டில், போக்குவரத்து நெரி-சலை முறைப்படுத்தும் வகையில் சிக்னல் செயல்பட்டது. நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்-பாட்டு பணியால், சிக்னலை பல மாதங்களாகவே இயக்க முடி-யாமல் போனது. வாகனங்களும் தாறுமாறாக சென்றன. தற்போது பணி நிறைவு பெற்றுள்ளது. எனவே சிக்னலை மீண்டும் இயக்க, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: சூரம்பட்டி நால்ரோட்டில் ஏற்கனவே செயல்பட்ட சிக்னல், சாலை மேம்பாட்டு பணிக்கு சாலை தோண்டப்பட்டதால் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் சிக்னலுக்கான ஒயர்களும் துண்டிக்கப்பட்டுள்ளன. சிக்னல் இல்லாததால் தங்கள் விருப்ப-படி வாகனங்களை இயக்கி செல்கின்றனர். பலர் அதிவேகமாக கடக்க முற்படுகின்றனர். இதனால் விபத்து அபாயம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிவெடுத்து, சிக்னலை செயல்பட செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை