| ADDED : பிப் 24, 2024 03:55 AM
சத்தியமங்கலம்-தாளவாடி தாலுகா திங்களூர் ஊராட்சி காடு பசுவன்மாளம், பெரியூர், சுஜில்கரை, திங்களூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு ஒரு மாதமாக, சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்லனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை.இதனால் ஆத்திரமடைந்த, 60க்கும் மேற்பட்ட பெண்கள், காடு பசுவன்மாளத்தில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடம்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தாளவாடி யூனியன் அதிகாரிகள் யாரும் வரவில்லை.குடிநீர் வினியோகம் செய்யும் மோட்டாரை விரைவில் பழுது பார்த்து, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று, போலீசார் உறுதி கூறவே, பெண்கள் மறியலை கைவிட்டனர். இதனால் காலை, ௮:௦௦ மணி முதல் ௯:௦௦ மணி வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.