உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

சிறுமியிடம் சீண்டிய தொழிலாளி கைது

ஈரோடு: அந்தியூர், மைக்கேல்பாளையம், அந்தியூர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 36; கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி-விட்டது. பவானியை சேர்ந்த, 16 வயது சிறுமியை பார்த்து வர்-ணித்து கையை பிடித்து இழுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !