உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

மில்லில் மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்

ஈரோடு: ஈரோடு அருகே பெருமாள் மலை, பெரியார் வீதியை சேர்ந்தவர் சீவகன், 34; அதே பகுதியில் ஒரு மில்லில் வாகன உதவியாளராக வேலை செய்தார். மூன்று மாதங்களுக்கு முன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் சாணிப்பவுடரை குடித்து சிகிச்சை பெற்றார். கடந்த, 17ம் தேதி காலை வேலைக்கு சென்றவர், இரவுப் பணியையும் தொடர்ந்துள்ளார். அன்றிரவு மயங்கி விழுந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ