உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மத்திய அரசின் பட்ஜெட் பா.ஜ., விளக்கக் கூட்டம்

மத்திய அரசின் பட்ஜெட் பா.ஜ., விளக்கக் கூட்டம்

உளுந்துார்பேட்டை : சேந்தநாட்டில் பா.ஜ.., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாட்டில் பா.ஜ.க., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். திருநாவலுார் ஒன்றியத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார்.மாவட்ட துணைத் தலைவர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரிகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் குமரவேல், மாவட்ட துணைத் தலைவர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராசு, ஓபிசி மாவட்ட தலைவர் வெற்றி, ஒன்றிய தலைவர்கள் வீரபாண்டியன், சுரேஷ், நகர தலைவர் காந்தி, நிர்வாகிகள் குப்பன், பாலு, கொளஞ்சி, சிவசக்தி, தமிழரசி, மாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ