| ADDED : ஏப் 17, 2024 11:30 PM
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் 15 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் 15 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.சேஷசமுத்திரம் 2 , ஊராங்காணி 1, சங்ககராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 1, கரடிசித்துார் 1, மாதவச்சேரி 4, பாண்டியங்குப்பம் 4, புத்திராம்பட்டு 3, சின்னசேலம் நவுன் 1 ஆகிய 15 ஓடுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஓட்டுச்சாவடிகளில் ,கண்காணிப்பு கேமரா கூடுதல் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.