உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிரபல சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்பு காவலில் கைது

பிரபல சாராய வியாபாரிகள் 2 பேர் தடுப்பு காவலில் கைது

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த இரு பிரபல சாராய வியாபாரிகள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வெங்கடேசன்,47; கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் ராஜா,39; பிரபல சாராய வியாபாரிகளான இவர்கள் மீது சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து இவர்களது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் பிரசாந்த், சாராய வியாபாரிகள் வெங்கடேசன், ராஜா ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையினை சின்னசேலம் போலீசார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை