உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போன் பேவில் பணம் அனுப்புவதாக மோசடி; உளுந்துார்பேட்டை அருகே 3 வாலிபர்கள் கைது

போன் பேவில் பணம் அனுப்புவதாக மோசடி; உளுந்துார்பேட்டை அருகே 3 வாலிபர்கள் கைது

உளுந்துார்பேட்டை : போன் பே-வில் பணம் அனுப்புவதாக கூறி மோசடி செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாளையகுஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் ஷாபாஷ்கான் மகன் யூசப்கான்,30; இவர் திருக்கோவிலுார் சாலையில் மொபைல் போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் இவரது கடைக்கு வந்த 3 பேர், யூசுப்கானிடம் அவசரமாக 2,000 ரூபாய் தேவைப்படுகிறது, போன் பே-வில் பணம் அனுப்புவதாக கூறினர்.அதனை நம்பிய யூசுப்கான் பணம் கொடுத்தார். பணத்தை வாங்கிய மூவரும், போன் பே-வில் பணத்தை அனுப்பவில்லை. பணத்தை கேட்ட யூசுப்கானை, மூவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.இதுகுறித்து யூசுப்கான் கொடுத்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எலவனாசூர்கோட்டை பஸ் நிலையத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர்கள் உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் வேல்மயில் மகன் காத்தவராயன்,29; முருகன் மகன் அஜய்,22; வெங்கடேசன் மகன் ஸ்ரீகாந்த்,21; என்பதும், போன் பே-வில் பணம் அனுப்புவதாக கூறி, யூசுப்கானிடம் பண மோசடி செய்தது, இதேபோன்று பலரை ஏமாற்றி ரூ.16 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அதன் பேரில் 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை