| ADDED : மே 10, 2024 01:43 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.உளுந்துார்பேட்டை அடுத்த இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரகுமார், 33; இவரது கூரை வீடு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. உடன் அருகில் இருந்த பிரகாஷ் மனைவி முல்லைவனம், 49; காத்தவராயன், 57; சுரேஷ், 40; முத்துக்குமார், 35; பாபு, 30; ஆகியோரது வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன.தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.ஆனால் அதற்குள் 6 வீடுகளும் எரிந்து முத்துக்குமார் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.