உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விபத்தில் வாலிபர் பலி 

விபத்தில் வாலிபர் பலி 

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் வாலிபர் இறந்தார்.தியாகதுருகம் அடுத்த பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் ரஞ்சித்குமார்,24; இவர் நேற்று தனது நண்பர் காளிமுத்து மகன் சஞ்சய்,24; என்பவருடன் மாலை 4.40 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சூளாங்குறிச்சியில் இருந்து பழைய சிறுவங்கூர் சென்றார். சித்தேரிப்பட்டு காந்திநகர் அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில், தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த சஞ்சய் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை