உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூடுதல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்க நடவடிக்கை: கலெக்டர்

கூடுதல் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் துவங்க நடவடிக்கை: கலெக்டர்

கள்ளக்குறிச்சி: கிராம மக்களின் வருமானத்தை உயர்த்த கூடுதலாக புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தினை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பின் அவர் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் 362 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில் உள்ள 292 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 650 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின்கீழ் ஒரு பால் குளிரூட்டும் நிலையமும், 17 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும் செயல்பட்டு வரு கின்றன. 68 பால் விற்பனை முகவர்கள் உள்ளனர்.இதன்மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள், பால் கொள்முதல் பதிவேடுகள், பால் குளிரூட்டப்படும் நடைமுறைகள் உள்ளிட்ட வற்றை நேரடியாக பார்வையிட்டு, கூட்டுறவு சங்கத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில் பால் குளிரூட்டும் நிலையத்திற்குத் தேவையான தண்ணீர் வசதிகளை மேம்படுத்தவும், கிராமப் புறங்களில் பொதுமக்களின் வருமானத்தை உயர்த்தி பால் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் கூடுதலாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் கூறினார்.ஆய்வின்போது பால் வள துணை பதிவாளர் கலா, பொது மேலாளர் ஈஸ்வர் ஜென்மத் ரெட்டி, உதவி பொது மேலாளர் வெங்கடேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை