உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு நடிகர் தியாகு குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு நடிகர் தியாகு குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: 'கள்ளச்சாராயம், போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தி.மு.க.,வை மக்கள் துாக்கியெறிய வேண்டும்' என்று நடிகர் தியாகு பேசினார்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் பஸ் நிறுத்தத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரத்து அவர் பேசியதாவது:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது தி.மு.க., ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.கள்ளச்சாராயம் விற்பனை, போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பால் இளைஞர்கள், மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் கொலைக்கு காரணமாக இருந்தார். அவரது மகன் ஸ்டாலின் தற்போது கள்ளச்சாராயம், போதையால் மக்களை கொன்று வருகிறார்.மக்கள் நலனில் அக்கறையின்றி செயல்படும் தி.மு.க., ஆட்சியை மக்கள் துாக்கியெறிய வேண்டும்.இவ்வாறு நடிகர் தியாகு பேசினார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை