உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆணைய விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

ஆணைய விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு ஆஜராகாத 112 பேருக்கு, மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 68 பேர் இறந்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து, 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ், கடந்த 3ம் தேதி முதல் கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக, கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்றவர்களுக்கு சம்மன் அனுப்பி தினசரி 10 பேரை அழைத்து விசாரித்து வந்தனர். அதில், உடல்நிலை பாதித்த 161 பேரில் 150 பேர் மட்டுமே ஆஜராகினர். 11 பேர் ஆஜராகவில்லை. நேற்று முன்தினம் முதல், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை துவங்கியள்ளது.இந்நிலையில் முதற்கட்ட விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரை விசாரிக்க அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை