உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அம்மன் தாலி திருட்டு: போலீசார் விசாரணை

அம்மன் தாலி திருட்டு: போலீசார் விசாரணை

ரிஷிவந்தியம்: பாசார் கிராமத்தில் மரகதாம்பிகை அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை திருடி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் சிவபாலன்,41; இவர் அதே பகுதியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில் மடாதிபதியாக உள்ளார். கடந்த மே மாதம் 8ம் தேதி, மர்மநபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து மரகதாம்பிகை அம்மன் சுவாமி கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தங்க தாலி செயினை எடுத்து சென்றுள்ளார்.கோவிலுக்கு வந்த மடாதிபதி சிவபாலன், அம்மன் கழுத்தில் தாலி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து ஊர்பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் கோவிலுக்கு சென்று, அங்கிருந்த சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான காட்சியை கொண்டு, தாலி செயினை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி