உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் லட்சுமி, கலா, தமிழரசி முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை தலைவர் பத்மா வரவேற்றார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.26 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.21 ஆயிரமும் வழங்க வேண்டும் உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வள்ளி, மாவட்ட இணை செயலாளர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை