| ADDED : ஆக 08, 2024 11:25 PM
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இப்போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்கவுள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள https://sdat.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, ஆவணங்களை சமர்பித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் இம்மாதம் 25ம் தேதி ஆகும்.எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட வேண்டும். விண்ணப்பங்களை தாங்களாகவோ அல்லது தங்கள் பள்ளி, கல்லுாரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 74017 03474 என்ற மொபைல் எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140 00777 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.