| ADDED : மே 11, 2024 05:19 AM
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பு சங்கத் தலைவர் அருணா தொல்காப்பியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மகேந்திரன், முதன்மை ஆலோசகர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி, பிளஸ் 2 தேர்வில் 589 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.இதையொட்டி, கூட்டமைப்பு சார்பில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் ஆசிரியர்களை பாராட்டி, சால்வை அணிவிக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதிக்கு கோப்பை வழங்கி கவுரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், சங்க மாவட்ட பொருளாளர் வெல்டன் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாரத், சிராஜூதீன், மனோகர், மணியன், ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா குருகுல பொறுப்பாளர்கள் பிரம்மச்சாரிணி நிஷ்காமிய பிராணா மாஜி, பிரம்மச்சாரிணி யக்ஞப்ராணா மாஜி மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.