| ADDED : ஜூலை 14, 2024 11:35 PM
மூங்கில்துறைப்பட்டு: மாநில அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.போட்டியில், மூங்கில்துறைப்பட்டைச் சேர்ந்த 14 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஜனனி, சுவாதி, தன்ஷிகா முதலிடமும், அன்புச்செல்வன், நகுல், யோகப்பிரியன், ஆல்வின், மோனிகா ஆகிய ஐந்து பேர் இரண்டாம் இடமும், சரவணவேலன், குமரன், பார்த்திபன் தர்ஷினி, பிரியதர்ஷினி, ரோஷினி மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.சாதனை மாணவர்களுக்கு மூங்கில்துறைப்பட்டில் பாராட்டு விழா நடந்தது. சிலம்பம் ஆசிரியர் சூரியமூர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.விழாவில் பயிற்சியாளர்கள் ஐயப்பன், சக்திவேல், அண்ணாமலை, ஜான் வின்சென்ட் ராஜ், விக்கி பங்கேற்றனர்.