|  ADDED : ஜூலை 26, 2024 04:44 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
கள்ளக்குறிச்சி: தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்க போட்டியில் பரிசு பெற்ற கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கு கல்லுாரி முதல்வர் பாராட்டினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மாணவர்கள், கடந்த 20ம் தேதி தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் நடந்த தேசிய அளவிலான தடவியல் மருத்துவம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் பங்கேற்ற மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிகள் தர்ஷினி முதல் பரிசும், பராசக்தி சிறப்பு பரிசு பெற்றனர்.அதேபோல் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் விவேகானந்தன், 'போஸ்டர் பிரசன்டேஷன்' போட்டியில் மூன்றாம் பரிசு மற்றும் கேடயம் பெற்றார். இதனையடுத்து பரிசுகள் பெற்ற மருத்துவ மாணவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் நேரு-வை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை ஆர்.எம்.ஓ., பொற்செல்வி, தடவியல் துறை தலைவர் செல்வகுமார், உதவி பேராசிரியர் வீரவிஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.