உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளியில் விழிப்புணர்வு

அரசு பள்ளியில் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சுப்பிரமணியன் பங்கேற்று, மலேரியா காய்ச்சலுக்கான அறிகுறிகள், அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, மலேரியா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் ரவிக்குமார், மீனாட்சி, சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஸ்வரன், வசந்தன், பாலா, களப்பணியாளர் புஷ்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை