உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. பக்ரீத் பண்டிகையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.இதில் அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது. பல்வேறு பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். மூங்கில்பாடி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.அம்சாகுளம் பள்ளி வாசல், நடுபள்ளி பள்ளி வாசல், அண்ணா நகர் பள்ளிவாசல், கிழக்கு பள்ளிவாசல் சேர்ந்த ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை