உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாரதி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

பாரதி பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

கள்ளக்குறிச்சி: பத்தாம் வகுப்பு தேர்வில் கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவன மாணவர்கள் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவி தர்ஷிணா 500க்கு 491, ஆர்.தர்ஷினி, ஹர்ஷிதா, கயல்விழி, மாணவர் முகிலன் தலா 490, மாணவி வி.தர்ஷினி 489, மாணவி விக்னேஷ்வரி, மாணவர்கள் அரவிந்த், ஜனார்த், திருச்செல்வம் ஆகியோர் தலா 488 மதிப்பெண் பெற்று முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.அதேபோல் கணிதத்தில் 22 பேர் 100க்கு100 எடுத்துள்ளனர். 400 மதிப்பெண்ணுக்கு மேல் 120 மாணவர்கள் பெற்றுள்ளனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமி, தாளாளர் கந்தசாமி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர்கள் சுமதி, ராமசாமி, புவனேஸ்வரி, லதா, வேலு உட்பட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்