உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

திருக்கோவிலுார: திருக்கோவிலுார் அடுத்த கச்சிக்குப்பம் சேர்ந்த ஏழுமலை மகன் ஆனந்த்,25; இவர் நேற்று காலை தனது யமகா பைக்கில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றுள்ளார். குலதீபமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி திடீரென திரும்பியுள்ளது. இதில் பைக்கில் சென்ற ஆனந்த் நிலைதடுமாறி லாரியின் மீது மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ