உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரத்தில் பைக் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதல்; பட்டதாரி வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பட்டதாரி வாலிபர் இறந்தார்.வரதப்பனுாரைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சிபிராஜ், 20; பி.காம்., பட்டதாரி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் நேதாஜி, சீனிவாசன் மகன் தயாநிதி. நண்பர்கள். 3 பேரும் நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் பதிவெண் இல்லாத பைக்கில் உலகியநல்லுார் சென்றனர். பைக்கை சிபிராஜ் ஓட்டினார். பெத்தானுார் - ஈசாந்தை சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர வேப்ப மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. உடன் விபத்தில் சிக்கிய மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர் பரிசோதனை செய்தில், சிபிராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தார். நேதாஜி, தயாநிதி ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை