உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பார்சல் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

பார்சல் லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பைக் மீது பார்சல் லாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பரிதாபமாக இறந்தார். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த குணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் வேல்முருகன, 40; மீன் வியாபாரி. இவர், நேற்று காலை 4.30 மணியளவில் உளுந்தூர்பேட்டையில் நாராயணன் தியேட்டர் அருகே மீன் வாங்கிக் கொண்டு வியாபாரத்திற்காக மொபட்டில் அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பார்சல் லாரி ஒன்று வேல்முருகன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி