| ADDED : ஏப் 30, 2024 11:19 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 40; இவர் கடந்த 28ம் தேதி மதியம் 2.30 மணியளவில் மொபட்டில் எம்.எஸ்.தக்கா அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ், 23; திருமலை முருகன் மகன் அன்பரசன், 23; ஆகியோர் ஹோண்டா பைக்கில் இளையராஜாவின் பைக் மீது மோதுவது போல் ஓட்டி சென்றனர். இதனால் இளையராஜாவுக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், இளையராஜா, அவரது மகன்கள் முகிலன், 18; 15 வயது சிறுவன் மற்றும் ஆகாஷ், அன்பரசன், பால்ராஜ் மகன் விக்னேஷ், 23; ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.