உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதிதாசன் பிறந்த நாள்

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாரதிதாசன் பிறந்த நாள்

கள்ளக்குறிச்சி : இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் பிரவீனா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் வரவேற்றார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்திப் பேசினார்.நிகழ்ச்சியில், பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு, அவரின் தமிழ்ப்பற்று மற்றும் சமூகபற்றினை பின்பற்றினால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை பிடிக்கலாம், கவிஞரின் பாரதிதாசனின் படைப்புகளை படிப்பதன் மூலம் எண்ணற்ற படைப்புகளை படைக்கும் திறமை கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டது.தொடர்ந்து, பாவேந்தர் பாரதிதாசன் குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் பாண்டியன், நாகராஜன், பார்த்திபன், கோமதி, நித்யா ஆகியோர் செய்தனர். உதவி பேராசிரியர் பிந்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை