மேலும் செய்திகள்
சித்தலுார் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
5 hour(s) ago
போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம்
5 hour(s) ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் செங்கல் உற்பத்தி பணி ஜரூராக நடக்கிறது.சங்கராபுரம் நகரில் தியாகராஜபுரம் செல்லும் சாலையில் பலர் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சங்கராபுரம் பகுதியில் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால் பலர் நிலங்களை விற்று வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகிறது.மேலும், இடம் வாங்கிய பலர் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால் செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. அரசின் சார்பில் குரூப் ஹவுஸ் கட்டும் பணி பல கிராமங்களில் நடைபெற்று வருகிறது.செங்கல்லுக்கு தற்போது நல்ல கிராக்கி இருப்பதால் பலர் சங்கராபுரம் பகுதியில் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு செங்கல் 8 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சங்கராபுரம் பகுதியில் செல்கல் உற்பத்தி தொழில் ஜரூராக நடக்கிறது.
5 hour(s) ago
5 hour(s) ago