உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

உளுந்துார்பேட்டை: அலங்கிரியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கிரி கிராமத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத நிதி நிலை அறிக்கையை கண்டித்து பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ரகுமான் தலைமை தாங்கி பட்ஜெட் நகலை எரித்தார்.அலங்கிரி கிளைச் செயலாளர் பாலு, ஒன்றிய நிர்வாகிகள் செம்மலை, மலர் உட்பட பலர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி

வட்டார தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் எசாலம், நேமூர், லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.வட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், கிளைச் செயலாளர்கள் ராஜமாணிக்கம், செல்வம், சரத்குமார், சிவக்குமார், வட்ட பொருளாளர்கள் ஆறுமுகம், காத்தவராயன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை