உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோவில் விழாவில் மோதல் 8 பேர் மீது வழக்குப் பதிவு

கோவில் விழாவில் மோதல் 8 பேர் மீது வழக்குப் பதிவு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சங்கராபுரம் அடுத்த முக்கனுார் காலனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நேற்று முன் தினம் நடந்தது. விழாவில் முக்கனுார் கிராமத்தை சேர்ந்த மணிவாசகன், 20, என்பவர் ஆதரவாளர்களுக்கும், ரங்கப்பனுார் ஏழுமலை, 18, என்பவரின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.தகவலறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, தகராறில் ஈடுபட்ட ரங்கப்பனுாரை சேர்ந்த ஏழுமலை, பரத், பொன்னரசன், மேலப்பட்டு பிரசன்னா, காங்கேயனுார் குகன் ஆகியோர் மீதும், மற்றொரு தரப்பில் முக்கனுார் மணிவாசகன், மணிகண்டன், மூர்த்தி என, 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்