உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் குடித்ததை மூடி மறைத்ததால் பலி உயர்வு

கள்ளச்சாராயம் குடித்ததை மூடி மறைத்ததால் பலி உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போனது குறித்து மாவட்ட அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சித்தது பலரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து உயிரிழந்த சுரேஷின் மனைவி ரசீதாபானு கூறியதாவது; தனது கணவர் சுரேஷிற்கு வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். நாங்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம். இந்நிலையில் திடீரென தனது உறவினர் பிரவீனுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். ஆனால் மருத்துவமனையில் பிரவீன் வேறு காரணத்தினால் இறந்து போனார் என்று கூறினர்.இதற்கிடையே ஒரே நேரத்தில் இருவரும் இறந்து போன நிலையில், கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்து விட்டதாக தெரிவித்தபோது, அதனால் இறக்கவில்லை என்று கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் மூடி மறைத்தனர். பிரவீன் இறந்த காரணத்தின் உண்மை நிலவரத்தை உடனடியாக தெரிவித்து மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தால் தற்போது பலர் இறந்திருக்க மாட்டார்கள்.ஆனால், கலெக்டர் கள்ளச்சாராயத்தினால் யாரும் இறக்கவில்லை என்றும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அறிக்கை விட்டார். இதனால் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலர் அச்சமின்றி இருந்தனர். மேலும் ஏற்கனவே சாராய பாக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்த பலரும் அதனை குடித்துள்ளனர். இதனால், மாலை 3:00 மணிக்கு மேல் பலருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கள்ளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்ற வளாகம் உள்ள 500 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள கருணாபுரம் குடியிருப்புகளின் மைய பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க காவல் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாராயம் விற்பனை குறித்து போலீசார் நன்கு அறிந்திருந்தும் அவர்களிடம் மாமூல் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளமால் இருந்துள்ளனர்.மேலும் கள்ளச்சாரயம் குடித்து பாதிப்பு ஏற்பட்ட பின்பும் மாவட்ட நிர்வாகத்தின் பொய்யான அறிக்கை மற்றும் காவல் துறையினர் அலட்சிய போக்கே பலரது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. முதன் முதலாக சிகிச்சைக்கு சென்ற பிரவீனின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெளிவாக விளக்கம் அளித்து எச்சரிக்கை விடுத்திருந்தால் பலரது உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை