| ADDED : ஆக 13, 2024 10:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் வரும் 16ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. 15 துறைகளைச் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வரும் 16ம் தேதி சங்கராபுரம் ஊராட்சி புதுப்பட்டு கிராமம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், அம்மையகரம் கிராமம், கள்ளக்குறிச்சி ஊராட்சி விளம்பார் கிராமம், கல்வராயன்மலை ஊராட்சி கரியாலுார் கிராமம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.இம்முகாமில் சம்மந்தப்பட்ட கிராமப் பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டும் என, தெரிவித்துள்ளார்.