உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் கலெக்டர் ஆய்வு

கல்வராயன்மலையில் கலெக்டர் ஆய்வு

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் தோட்டக்கலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கல்வராயன்மலையில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் வெள்ளிமலை பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் பதப்படுத்தும் மையத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சாத்தனுார் கிராமத்தில் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள காளான் பண்ணையை ஆய்வு செய்தார். மேலும் கரியாலுார் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அரசு மானியத்தில் அமைந்துள்ள தேனீ வளர்ப்பு பணிகள் மற்றும் ரூ 75 ஆயிரம் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ள அவரை சாகுபடி பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண் மற்றும் தோட்டக்லை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி