உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு 

பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு 

சங்கராபுரம்: பொதுத் தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.தேவபாண்டலம் பிஸ்மி அகாடமி, கார்குழலி கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு, தாமோதரன் தலைமை தாங்கினார். இனாயதுல்லா வரவேற்றார். தொழிலதிபர் கதிரவன், பொதுத் தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் தேவபாண்டலம் முனியம்மாள், அ.பாண்டலம் பாப்பாத்தி, ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு, ஸ்டார் கிளப் மாவட்ட தலைவர் முகமது ரபிக், பாண்டலம் அரிமா சங்க தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். வசந்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ